திருச்சியின் 87ஆண்டுகளான ராமகிருஷ்ணா டாக்கீஸ்க்கு நிரந்தர திரை
புதுமை என்பதே நவீன பழமை தான். ஆனால் இந்த புதுமைக்காக பழங்கால நினைவுகளை நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பது வருந்தத்தக்க உண்மை!
Photo Courtesy: The New Indian Express
திருச்சியின் பெருமை சொல்லும் பட்டியலில் கிட்டத்தட்ட எட்டு தசாப்தங்களாக ராமகிருஷ்ணா திரையரங்கம் இடம்பெற்று வருகிறது.
அத்தோடு, ஒரு திரையரங்கமாக மட்டுமல்லாமல் திருச்சி மக்களின் வாழ்வோடு இணைக்கப்பட்ட நினைவாலயம் என்றும் இதனை சொல்லாம்.
1934ம் ஆண்டு MRS வாசுவால் கட்டப்பட்ட ராமகிருஷ்ணா டாக்கீஸ் "ஏழைகளின் சொர்க்கம்" என்றே அழைக்கப்பட்டது.
700 இருக்கைகளோடு மிகவும் குறைவான கட்டணத்தோடு மக்களின் மகிழ்ச்சிக்காகவே ஓடிக்கொண்டிருந்த திரையரங்கம் என்று கூறலாம் .
ஆனால் கொரோனா நோய்த்தொற்று பலரது வாழ்க்கையை மாற்றியதுப்போல் திரையரங்குகளின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதித்தது . கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று முழு முற்றாக இடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
திரையரங்கின் உரிமையாளர் வெங்கடேஷிடம் பேசினோம்.
அவர் கூறியதாவது, " 2012-ல் இருந்து திரையரங்கினை நான் நடத்தி கொண்டு இருக்கிறேன் .ஆனால் பொருளாதார நெருக்கடியானது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஜிஎஸ்டி வரி ஒருபுறமிருக்க இன்றைய காலத்தில் ஒன்பது மாதங்களாக வருமானம் இல்லாமல் போய்விட்டது வேறுவழியின்றி இன்றைக்கு இதனை இடிக்கும் நிலைக்கு வந்து உள்ளேன்", என்கிறார்.
எம் ஆர் எஸ் ராமகிருஷ்ணன் திருச்சியின் மிக தேர்ந்த கண் மருத்துவர். இந்த திரையரங்கத்தை குறித்து தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார், " திருச்சி மரக்கடை பகுதியில் என் தந்தை 1934ஆம் ஆண்டு திரையரங்கை தொடங்கினார் .ஒரே ஆண்டில் தான் எனக்கும் திரையரங்கிற்கும் பிறந்தநாள் என்று கூறலாம். ஆம்! நான் பிறந்த ஆண்டு தான் திரையரங்கை என் தந்தை கட்டி முடித்தார்.மேட்டூர் அணை கட்டப்பட்டபோது அங்கிருத்து கொண்டுவரப்பட்ட உலோகமே கூரையின் மையப்பகுதிக்கு
கட்டுமாணப்பணியில் பயன்படுத்தபப்பட்டது .
எங்கள் குடும்பத்தாரால் தொடர்ந்து 1947 வரை திரையரங்கம் நடத்தப்பட்டது ,பின்னர் இதனுடைய நிலத்தினை குத்தகைதாரர்களிடம் கொடுத்து விட்டோம் ஆனால் என் மனைவி ஒரு சமூக செயற்பாட்டாளர் . கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு 1989 ஆம் ஆண்டு மீண்டும் இந்த திரையரங்கினை நடத்திட முன்வந்தார் ,அவருக்கு இது பற்றிய எந்த முன்னபவமும் கிடையாது . ஆனாலும் இதை நன்றாக நடத்திக் காட்ட வேண்டுமென்று தினந்தோறும் உழைத்தவர் அவர்.
எத்தனை புதுமையான தியேட்டர்கள் வந்தாலும் இந்த தியேட்டர்க்காண பெருமையும் புகழும் அப்படியேதான் இருந்து கொண்டிருக்கிறது.
எம்ஜிஆர் காலம் முதல் தளபதிவிஜய் காலம் வரைக்கும் ஆதிக்கம் செலுத்திய திரையரங்கம் என்றே கூறலாம் .
விஜயகாந்தின் வல்லரசு, ரஜினியின் பாட்ஷா உள்ளிட்ட திரைப்படங்கள் இங்கு வெற்றி நடைப்போட்டன. இன்றைய தலைமுறையோடு 8 தசாப்தங்களாக இருந்த இந்த திரையரங்கை பற்றி திருச்சியில் உள்ள அனைவரும் அறிவர்.இன்றைக்கு அதனை இடிப்பதை பார்க்கும்போது மனது மிகவும் வலிக்கிறது" என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81