திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டம், கொட்டப்பட்டு கிராமம் மற்றும் திருவெறும்பூர் வட்டம். கீழக்கல்கண்டார்கோட்டை மற்றும் கீழக்குறிச்சி ஆகிய கிராமங்களில் திருச்சிராப்பள்ளி விமான நிலைய விரிவாக்கத்திற்காக நடைபெறும் நிலம் கையகப் பணிகள் குறித்து (26.09.2025) திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திருச்சிராப்பள்ளி விமான நிலைய கூட்ட அரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மொத்தம் 298.82 ஏக்கர் பட்டா நிலங்களில் 285,48 ஏக்கர் பட்டா நிலங்களுக்கான கையகப் பணிகள் முடிவுற்று, அவற்றுடன் 166.97 ஏக்கர் இராணுவ நிலம் மற்றும் 5.82 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் விமான நிலைய விரிவாக்க பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஓடுதளப்பாதையில் உட்படும் மீதமுள்ள 7.67 ஏக்கர் நிலமானது கையகம் செய்திட அரசாணை வெளியிடப்படும் தருவாயில் உள்ளதால், ஓடதளப்பாதைக்கான மதிப்பீட்டு அறிக்கையை விரைந்து தயார் செய்திடவும் மாநில அரசின் இதர துறைகளின் இசைவினை பெற்றிடவும், மேலும் விமானநிலைய நில கையகப்பணிகள் முடித்து நிலங்களை ஒப்படைத்தவுடன் விமான ஓடுதளப்பாதை கட்டுமான பணியினை துரிதப்படுத்திடவும் திருச்சிராப்பள்ளி விமானநிலைய இயக்குநருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இவ்வாய்வுக் கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்ட வருவாய் அலுவலர், உதவி ஆட்சியர் (பயிற்சி), திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர், திருச்சிராப்பள்ளி விமான நிலைய இயக்குநர், விமான நிலைய முதுநிலை மேலாளர்(நிலங்கள்), திருச்சிராப்பள்ளி பொதுப்பணித் துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்டம் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்கள். நெடுஞ்சாலைகள் உதவி கோட்ட பொறியாளர் மற்றும் விமான நிலைய விரிவாக்க நிலமெடுப்பு தனிவட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments