Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's identities

சமூக வலைதளங்களில் வைரலாக இருக்கும் திருச்சி பிஷப் காலேஜ் கிறிஸ்துமஸ் மரம் – வரலாறும் பின்னணியும்!

திருச்சி மாநகரில் சிறந்த ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக விளங்குவது இந்த பிஷப் ஹீபர் கல்லூரி. சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இக்கல்லூரியில் கல்வி பயின்று வருகின்றனர். தென்னிந்திய கிறிஸ்தவ திருச்சபையால்(CSI) இக்கல்லூரி நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை தொடங்கினாலே கல்லூரி முழுவதும் விழாக்கோலம் தான். கடந்த நான்கு வருடங்களாக கல்லூரியின் உட்புறத்தில் அமைந்துள்ள கோல்டன் ஜூபிலி கட்டிடத்தின் நடுப்பகுதியில் சுற்றிலும் கண்ணாடிகள் அமைக்கப்பட்டு சுமார் 32 அடி உயரத்தில் இந்த கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்படும். முக்கோண வடிவில் பார்ப்பதற்கே மிக அழகாக வடிவமைக்கப்பட்ட இந்த மரத்தினை கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் அனைவரும் புகைப்படம் எடுத்து பகிர்ந்து வருவர்.

ஆனால் இந்த வருடம் கொரோனா காலகட்டம் என்பதால் மாணவர்கள் கல்லூரிக்கு செல்ல இயலாத நிலையில் 5வது வருடமாக கிறிஸ்மஸ் மரத்தினை முக்கோண வடிவில் அழகாக கல்லூரியின் வெளிப்புறத்தில் அமைத்துள்ளனர். சுமார் 32 அடி உயரமுள்ள இந்த கிறிஸ்மஸ் மரம் கல்லூரிக்கு செல்ல முடியாத மாணவ மாணவிகள் பலர் இதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். கல்லூரிக்கு செல்ல முடியாவிட்டாலும் வாய்ப்பிருக்கும் மாணவர்களுக்காக இந்த வருடம் வாசலிலேயே கிறிஸ்துமஸ் மரத்தை அழகாக வடிவமைத்தது பல மாணவர்களுக்கு மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உண்டு பண்ணியது.

Advertisement

32 அடி உயரம் கொண்ட கிறிஸ்துமஸ் மரம் கல்லூரியின் நுழைவாயிலில் வரவேற்கிறது. மரத்தின் முக்கியத்துவத்தை அறிய கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் ஃபெமிளா அலெக்சாண்டரை அணுகியபோது, கல்லூரியில் பொருளாளர் முனைவர் ஞானராஜ் அவர்களை கேட்டறிந்து மரத்தின் கதையை பகிர்ந்து கொண்டது ஆச்சரியமாக இருந்தது. “கிறிஸ்துமஸ் மரம் கடந்த நான்கு ஆண்டுகளாக பொன்விழா கட்டிடத்தில் , கட்டிடங்கள் சூழ்ந்திருக்கும் நடு மையத்தில் வைக்கபட்டதாகவும், இதுவே முதல் முறை நுழைவு வாயிலில் வைக்கிறோம்.

4 ஆண்டுகள் மாணவர்களுக்கு மத்தியில் பிரபலமடைந்த இந்த கிறிஸ்மஸ் மரம், இந்த முறை கொரோனா காலமானதால், மாணவர்கள் கல்லூரியில் அனுமதிக்கப்படாததால், நுழைவாயிலில் விளக்குகளை கொண்டு இம்மரம் அமைக்கப்பட்டது. இதை திருச்சியின் பிஷப் – தஞ்சை மறைமாவட்டத்தின் Rt.Rev.Dr. D. சந்திரசேகரன் திறந்து வைத்தார். இதைப் பார்த்த மாணவர்கள் புகைப்படம் எடுத்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டதிலேயே மீடியா முழுவதிலும் பிரபலமானது. 

வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் ஃபெமிளா அலெக்சாண்டர்

32 அடி உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்து மற்றும் புதிய வாழ்க்கையின் அடையாளமாக மாறும் – இது முக்கோண வடிவத்தில் இருப்பது திரித்துவத்தை குறிக்கிறது. இது கிறிஸ்துமஸின் மகிழ்ச்சியைக் காட்டுகிறது மற்றும் உலகில் இருளைத் துடைக்க ஒளியைக் கொண்டு வருகிறது. வழக்கமாக, கிறிஸ்தவர்கள் அலங்கரிக்கப்பட்ட மரங்களை தங்கள் வீடுகளுக்குள் கொண்டு வருகிறார்கள். புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதியான மார்ட்டின் லூதர் முதலில் ஒரு மரத்தில் ஒளிரும் மெழுகுவர்த்திகளைச் சேர்த்தார் என்று பரவலாக நம்பப்படுகிறது. 

கிறிஸ்துவின் பிறப்பே உலகத்திற்கு வெளிச்சத்தை கொண்டு வருகிறது. கொரோனா காலகட்டத்தில் அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு பயத்தை நீக்கி உலகத்திற்கும் வெளிச்சத்தைக் தருவதாக, கிறிஸ்துமஸ் மரம் சொல்லாமல் சொல்கிறது.

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு ஐரோப்பாவில், இந்தப் பழக்கம் தொடங்கியது. கிறிஸ்துமஸ் மரங்கள் சங்கிலிகளைப் பயன்படுத்தி உச்சவரம்பிலிருந்து தலைகீழாக தொங்கவிடப்பட்டதாகத் தெரிகிறது (சரவிளக்குகள் / லைட்டிங் கொக்கிகள் ஆகியவற்றிலிருந்து தொங்கவிடப்பட்டுள்ளது). பிற ஆரம்பகால கிறிஸ்துமஸ் மரங்கள், வடக்கு ஐரோப்பாவின் பல பகுதிகளிலும், செர்ரி அல்லது ஹாவ்தோர்ன் தாவரங்கள் (அல்லது தாவரத்தின் ஒரு கிளை) தொட்டிகளில் போடப்பட்டு உள்ளே கொண்டு வரப்பட்டன. எனவே அவை கிறிஸ்துமஸ் நேரத்தில் பூக்கும். ஆப்பிள் மற்றும் மெழுகுவர்த்திகளைக் கொண்ட மரம் போல அலங்கரிக்கப்பட்டன. கிறிஸ்துமஸ் ஈவ் அன்று தேவாலயங்களுக்கு முன்னால் செயல்பட்ட இடைக்கால ஜெர்மன் மர்மம் அல்லது அதிசய நாடகங்களில் இவை பயன்படுத்தப்பட்டன. புனிதர்களின் ஆரம்ப தேவாலய நாட்காட்டிகளில், டிசம்பர் 24 ஆதாம் மற்றும் ஏவாளின் நாள். சொர்க்க மரம் ஏதேன் தோட்டத்தைக் குறித்தது. நாடகத்தை விளம்பரப்படுத்துவதற்கான ஒரு வழியாக, நாடகம் தொடங்குவதற்கு முன்பு இது பெரும்பாலும் நகரத்தைச் சுற்றி அணிவகுத்துச் செல்லப்பட்டது. நாடகங்கள் பார்க்க முடியாத மக்களுக்கு பைபிள் கதைகளைச் சொன்னன. இதுவே பண்டைய கால கிறிஸ்மஸ் மரத்தின் வரலாறு.

Advertisement

பிஷப் ஹெபர் கல்லூரியின் புகழ்பெற்ற கிறிஸ்துமஸ் மரத்தின் அர்த்தத்தை சுட்டிக்காட்டிய வரலாற்றுத் துறை , கல்லூரியின் தாளாளர் பேராயர் முனைவர் சந்திரசேகரன், கல்லூரி முதல்வர் முனைவர் டி.பால் தயாபரனுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

COVID – 19 இன் பீதியின் கீழ் ஒளிரும் கிறிஸ்துமஸ் மரம் மக்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *