திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் ஆக்சூரியல் அறிவியல் துறை-(Actuarial Science)காப்பீடு சார்ந்த புதிய பாடப் பிரிவு

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் ஆக்சூரியல் அறிவியல் துறை-(Actuarial Science)காப்பீடு சார்ந்த புதிய பாடப் பிரிவு

தமிழகத்தில் உயர் கல்வியில் பல்வேறு பாடப்பிரிவுகள் புதிது புதிதாக அறிமுகமாகி கொண்டிருக்கிறது.

 அவ்வரிசையில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் காப்பீடு சார்ந்த ஆக்சூரியல்  அறிவியல் என்ற துறை அறிமுகப்படுத்தப்பட்டு  1991லிருந்து செயல்பட்டு  வருகிறது. 

தமிழகத்தில் இந்த  துறைக்கான பிரத்தியேகமாக தனித்துறை அமைக்கப்பட்ட ஒரே கல்வி நிறுவனமாக பிஷப் ஹீபர் கல்வி நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. 

பாடப்பிரிவு குறித்து இத்துறையின் தலைவர் ஹெப்சிபா பியுலா கூறியதாவது, மருத்துவம் பொறியியல் என சுருங்கிப்போன உயர் படிப்பில் அதனைத் தாண்டி உயர் பதவியும் அதிக ஊதியமும் பெற்றுத்தரும் வாய்ப்பை தரும் பாடம்தான் ஆக்சூரயல் அறிவியல். 

ஆக்சூரியர்கள் என்பவர்கள்   இத்துறையில் பயிற்சி பெற்ற நிபுணர்கள் .

கணிதம், நிகழ்தகவு கோட்பாடு, புள்ளியியல், நிதி பொருளாதாரம் மற்றும் கணினி அறிவியல் உள்ளிட்ட பல ஒன்றுக்கொன்று தொடர்புடைய பாடங்களை ஆக்சூரியல்  அறிவியல் உள்ளடக்கியிருக்கிறது.
 1991 ஆம் ஆண்டுLIC நிறுவனத்திற்கு அதிக ஆக்சூரியர்கள் தேவைப்பட்ட நேரத்தில்  இந்தியாவின் முதன்மை ஆக்சூரியர்  ராமகிருஷ்ணன் என்பவர் இக்கல்லூரிக்கு இத்துறைசார்ந்த  திட்டத்தை முன்வைத்தபோது   கல்வி நிறுவனமும் அதனை ஏற்று முதல் முதலில்   டிப்ளமோPGDAS கல்விப் பிரிவுக்கொண்டு தொடங்கப்பட்டது.
பின்னர், இளங்கலை  2012 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது, 2002 முதுகலையும் கொண்டுவரப்பட்டு இதற்கென  ஆக்சூரியர்  அறிவியல் துறை என்று பெயரில்   செயல்பாட்டில் உள்ளது. 


இன்றைய சூழலில் காப்பீட்டு துறையானது மிக வேகமாக வளர்ந்து வருகிறது காப்பீடு என்றவுடன் பலரும் நினைப்பது போல இன்சூரன்ஸ் ஏஜென்ட் மற்றும் டெவலப்மன்ட் ஆபீசர் என்பதல்ல மாறாக ஒவ்வொரு துறையிலும் நிறுவனங்கள் காப்பீட்டு திட்டங்களை வடிவமைத்து காப்பீட்டு தொகை நிர்ணயித்தல் மேலும் காப்பீடு மற்றும் இழப்பீடு தொகையை முடிவு செய்தல் என பல பிரிவுகளை உள்ளடக்கியது.

 இது சார்ந்த நிபுணர்களை உருவாக்கும் பாடமே ஆக்சூரியர்  அறிவியல்.
உலக அளவில் காப்பீட்டு துறைகள் அதிகமாக பெருகி வரும் நிலையில் அது சார்ந்த நிபுணர்களும் அதிகாரிகளும் அலுவலர்களும் அதிகமாக தேவைப்படுகின்றனர் முதுகலை ஆக்சூரியர் அறிவியல் படித்தவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் வேலைகள் காத்துக் கிடக்கின்றன.
 இத்துறையில்  ஆய்வு படிப்பை முடித்தால் உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் வேலை பெறும் வாய்ப்பு மிக வேகமாக உயர் பதவியை அடைவது மிக எளிமையான ஒன்று .

கிட்டத்தட்ட இத்துறையில் படித்தவர்களுக்கு வருடாந்திர வருமானமாக 7.5 லட்சத்தில் கிடைக்கும்.
 மருத்துவம் ,பொறியியல்  மட்டுமின்றி இது போன்ற உயர் கல்வி பாடப்பிரிவுகளும் வாழ்க்கையில் உயர் பதவிகளை அடைய உதவும் என்றும் கூறியுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu