பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருவதை எதிர்த்து, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநகர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயகத்தை பாதிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. சிறுபான்மையினர், ஓபிசிகள் மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு எதிரான கொள்கைகள் அமல்படுத்தப்படுகின்றன. மேலும் தமிழ்நாட்டின் நலன்கள் மற்றும் நிதி ஆதரவுகள் மத்திய அரசால் மறுக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் பிரதமர் மோடியே பொறுப்பாக உள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கண்டனமாக, ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு, மரக்கடை, திருச்சி பகுதியில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படவுள்ளது.இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய தேசிய காங்கிரசின் தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்புகளின் உறுப்பினர்கள் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments