வீடு தேடி வரும் அரசு சேவைஉங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.07.2025) சிதம்பரத்தில் துவக்கி வைத்தார் இதனைத் தொடர்ந்து மாநில முழுவதும் முகாம் நடைபெற்று வருகிறது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் முதல் கட்டமாக மண்டலம் 5 க்கு உட்பட்ட தில்லை நகர் மக்கள் மன்றத்தில் 22வது வார்டுக்கும், மண்டலம் 1 க்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் பகுதியில் 1 மற்றும் 2 வார்டுகளுக்கு ஸ்ரீரங்கம் தேவி மஹாலில் நடைபெற்றது.
இதில் நகர்புறத்தில் 13 துறைகள் அடங்கிய 43 சேவைகள் தொடர்பான பொதுமக்கள் மனு அளித்தார்கள். இம்முகாமை மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள்,ஆணையர் திரு. லி.மதுபாலன் இ.ஆ.ப. , ஆகியோர் நேரில் பார்வையிட்டு பொதுமக்களிலும் மனுக்களை பெற்றார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ர. ராஜலட்சுமி,நகர பொறியாளர் பி. சிவபாதம், மண்டலத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன்,உதவி ஆணையர் சின்ன கிருஷ்ணன்மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
Comments