வார விடுமுறை 3 நாட்கள் இருப்பதால் திருச்சி மாவட்டத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கும் பொருட்டு (Weekend Operation) திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 15.08.2025 இரவு திருவெறும்பூர் உட்கோட்டம், மணிகண்டன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமலை சமுத்திரம், நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட MIET கல்லூரி சோதனைச் சாவடி மற்றும் சமத்துவபுரம், துவாக்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட துவாக்குடி TollPlaza ஆகிய பகுதிகளில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்கள் திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், நெடுஞ்சாலை ரோந்து மற்றும் இருசக்கர ரோந்து பணி மற்றும் சோதனைச் சாவடியில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு வாகனத் தணிக்கையின் முக்கியத்துவத்தையும், சந்தேக நபர்களை சோதனை செய்தும், FRS (face recognition system) App -ன் மூலம் ஒப்பீடு செய்து, ஏதேனும் முன் வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளவும் அறிவுரைகள் வழங்கினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments