Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's heroes

தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ள திருச்சி பெண் காவல் ஆய்வாளர்

தமிழ்நாடு காவல்துறையினருக்குகாக ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய மாநில அளவிலான (State level Police Duty Meet 2023) சென்னை ஓமனாஞ்சேரியில் உள்ள காவல் உயர்பயிற்சியகத்தில் (Tamil Nadu Police Academy) கடந்த 27.11.2023-ந்தேதி முதல் 01.12.2023-ந்தேதி வரை 5 தினங்கள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மண்டலத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி அறிவுறுத்தலின்படி, திருச்சி மாநகரம் காவல்துறை சார்பில் 1 காவல் ஆய்வாளர், 2 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1 சிறப்பு உதவி ஆய்வாளர் என 4 பேர் கலந்து கொண்டார்கள். மேற்கண்ட போட்டிகள் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என தனித்தனியாக நடைபெற்றது. திருச்சி மாநகரத்தில் இருந்து சென்றவர்கள் தடய அறிவியல் (Forensic science), தடய மருத்துவவியல் (Forensic Medico Legal) , கைரேகை (Fingar Print), சட்ட நுணுக்கங்கள் (LAW) என 6 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 95 காவல் ஆய்வாளர்கள் முதல் காவல் ஆளிநர்கள் வரை கலந்து கொண்டார்கள்.

மேற்கண்ட போட்டிகளில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வனிதா, மாநில அளவில் தடய அறிவியலில் பிரிவில் (Forensic science), 2-ம் பரிசும், தட மருத்துவவியலில் (Forensic Medico Legal) 3-ம் பரிசும் என மொத்தம் 2 பதக்கங்களை வென்றுள்ளார்கள். 2 பதக்கங்களை வென்ற ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வனிதா அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

திருச்சி மாநகர காவல்துறை சார்பாக போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வனிதா, மாநகர காவல் ஆணையரகத்திற்கு நேரில் அழைத்து காவல் ஆணையர் ந.காமினி, காவல் ஆய்வாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, வெகுவாக பாரட்டினார். மேலும் தேசிய அளவிளான போட்டியில் கலந்து கொள்ள ஏதுவாக சில ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய..

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *