Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's heroes

7.5 சதவீத மருத்துவ இட ஒதுக்கீட்டில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த திருச்சி அரசு பள்ளி மாணவன்!!

ஒரு காலத்தில் அரசுப் பள்ளியா என்று ஏளனமாய் பார்த்தவர்கள் இன்று அரசு பள்ளியை வியப்புடன் பார்த்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது அதிகமாகவே காணப்படுகிறது. கொரோனா தாக்கம் ஒருபுறம் இருந்தாலும் ஆசிரியர்களின் விடா முயற்சி சமீபத்தில் வெளியான 7.5 மருத்துவ இட ஒதுக்கீட்டை பார்த்தாலே தெரியும்.

Advertisement

அந்த வகையில் திருச்சியை சேர்ந்த மாணவன் ஒருவன் தமிழக அளவில் 7.5 மருத்துவ இட ஒதுக்கீட்டில் முதல் இடத்தையும் நம்முடைய திருச்சிக்கு பெருமை சேர்த்துள்ளார். திருச்சியின் நூற்றாண்டு பழமை மிக்க லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர் இவர். நடுத்தர குடும்பத்தில் தன்னுடைய அப்பா மளிகை கடையில் கூலி வேலை செய்து வருபவரின் மகன் தமிழக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ ஒதுக்கீட்டில் முதலிடம் பெற்றுள்ளார் என்றால் அது ஒட்டுமொத்த திருச்சிக்கும் பெருமை!

திருச்சி மாவட்டத்தில் லால்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்பது நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. அன்றைய காலகட்டத்தில் காவிரி ஆற்றினை கடந்து சென்று படிப்பறிவு மேற்கொண்டு அந்த சுற்று வட்டாரத்திற்கு ஒரே பள்ளியாக திகழ்ந்தது இப்பள்ளி தான். அப்போது ஆரம்பித்த கல்விப்பணி இன்றளவும் பலரை பல உயரிய விருதுகளும் பல மாணவர்களின் கனவுகளை நனவாக்கி உள்ளது இந்த லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.

Advertisement

சமீபத்தில் 7.5% மருத்துவ ஒதுக்கீடு பெற்றதில் திருச்சியை சேர்ந்த 9 அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. இதில் லால்குடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஹரி கிருஷ்ணா என்ற மாணவன் இட ஒதுக்கீட்டில் தமிழக அளவில் முதலிடத்தையும், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கான இடத்தையும் பெற்றுள்ளார்.

இதுகுறித்து ஹரி கிருஷ்ணா மாணவனை தொடர்பு கொண்டு பேசினோம்…. “என்னுடைய பள்ளி ஆசிரியர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். பத்தாம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் இடத்தைப் பெற்றேன். அதன்பிறகு மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு பயணிக்கத் தொடங்கினேன். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது மாவட்ட ஆட்சியர் கீழ் என்.ஐ.டி யில் நடைபெற்ற ஜேஇஇ, நீட் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியில் கலந்து கொண்டேன். அதன்மூலம் முதல் முறை நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளேன்” என்றார்.

திருச்சியை சேர்ந்த மாணவன் தமிழக அளவில் முதலிடத்தை பெற்று மருத்துவராக வேண்டும் என்ற கனவை நினைவாக்கி சாதனை படைத்துள்ளார் என்பது பெருமைக்குரியது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *