சாலைப் போக்குக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் ஜெய்ராம் கட்கரி
அவர்களை இன்று (19.12.2025) பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து திருச்சி – கரூர் – கோவை பசுமை நெடுஞ்சாலைத் திட்டம், சென்னை – திருச்சி – தூத்துக்குடி பசுமை நெடுஞ்சாலைத் திட்டம், திருச்சி அரை-வட்ட வளைச் சாலைத் திட்டம் (ஜீயபுரம் – பஞ்சப்பூர்) ஆகிய பசுமைவழி நெடுஞ்சாலைகள் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து அறிய கடிதம் வழங்கினேன்.
மேற்கண்ட திட்டங்களின் நிலை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். அதற்கு பதில் அளித்த மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்கள் திருச்சி கரூர் கோவை நெடுஞ்சாலை திட்டத்தில் திருச்சி கரூர் பகுதி தொடர்பான தகவலை தரவில்லை. ஆகவே மீண்டும் அமைச்சரை சந்தித்து இது குறித்து முறையிடுவேன் என்று முன்பே தெரிவித்து இருந்தேன்.
திருச்சி – கரூர் – கோவை பசுமை நெடுஞ்சாலைத் திட்டம், சென்னை – திருச்சி – தூத்துக்குடி பசுமை திட்டங்களின் நிலைநெடுஞ்சாலைத் திட்டம், திருச்சி அரை-வட்ட வளைச் சாலைத் திட்டம் (ஜீயபுரம் – பஞ்சப்பூர் ) ஆகிய திட்டங்கள் விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report – DPR) தயாரிக்கும் பணியில் உள்ளது.
மேற்கண்ட திட்டங்கள் தமிழ்நாட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ளதால் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தி, பாதுகாப்பை உறுதிபடுத்தி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க கூடிய முக்கிய திட்டமாகும்.
திருச்சி – கரூர் – கோவை பசுமை நெடுஞ்சாலைத் திட்டம் முக்கிய நகரங்களை இணைக்கும் திட்டமாகும். திருச்சி – கரூர் – கோவை பசுமை நெடுஞ்சாலைத் திட்டத்தில் கரூர்- கோவை பகுதி பணிகள் நன்றாக செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் இத்திட்டத்தில் திருச்சி- கரூர் வழித்தடத்தில் தற்போதைய சாலைக்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட புதிய திருச்சி- கரூர் வழித்தடத்தில் பூர்வாங்க பணிகள் கூட தொடங்கப்படவில்லை என்பதை குறித்து அதன் தற்போதைய நிலை குறித்து அறிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
அதைப்போல சென்னை – திருச்சி – தூத்துக்குடி பசுமை நெடுஞ்சாலைத் திட்டம் நீண்ட காலமாக DPR நிலையிலேயே உள்ளது. மாநில தலைநகரம் மற்றும் தமிழ்நாட்டின் தென்னக பகுதியில் துறைமுகம் சார்ந்த தொழில் நகரத்தை இணைக்கும் திட்டமாகும். ஆகவே இத்திட்டத்தை விரைந்து DPR நிலையில் உள்ள இத்திட்டத்தை குறித்த நேரத்தில் செயல்படுத்த வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தேன்.
மேலும் திருச்சி மற்றும் சுற்றுவட்டார மக்களின் நீண்டகால கோரிக்கையான திருச்சி அரை-வட்ட வளைச் சாலைத் திட்டம் (ஜீயபுரம் – பஞ்சப்பூர் – துவாக்குடி) தற்போது DPR தயாரிப்பு நிலையில் உள்ளது. பஞ்சப்பூரில் ஓருங்கிணைந்த பேரூந்து நிலையம் அமைந்துள்ள நிலையில் இத்திட்டம் மேற்கு மற்றும் வடக்கு மண்டலங்களை இணைக்க உதவும் என்று எதர்பார்க்கப்படுகிறது. எனவே DPR நிலை குறித்தும், அடுத்தடுத்த பணிகள் குறித்தும் தெரிவிக்க கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
ஒன்றிய அமைச்சர் நிதின் ஜெய்ராம் கட்கரி அவர்கள் பதில் அளிக்கையில், திருச்சி – கரூர் தற்போதைய நெடுஞ்சாலை Build Operate Transfer (BOT) நிலையில் உள்ளது. அந்த BOT ஐ எடுத்துள்ள குத்தகை நிறுவனத்தின் குத்தகை காலம் விரைவில் முடிய இருப்பதால் அதன் பின் உரிய வழிவகை செய்து விரைவில் புதிய வழிதடத்திற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,
சென்னை – திருச்சி – தூத்துக்குடி பசுமை நெடுஞ்சாலைத் திட்டம் உரிய வழித்தடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், திருச்சி அரை-வட்ட வளைச் சாலைத் திட்டம் (ஜீயபுரம் – பஞ்சப்பூர் ) திட்டப் பணிகள் வரும் 2026 ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று உறுதியளித்தார் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments