திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் பிட்டராக வேலை பார்த்து வந்த சிவசக்தி (வயது 47) என்பவர் பணியின் போது மயங்கி விழுந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் அவரது உடலை மீட்டு உடல்கூறு ஆய்விற்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்
அறிய…
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments