தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், திருச்சி வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட அனைத்து திட்டப்பகுதிகளில் உள்ள மனைகள், வீடுகள்,அடுக்குமாடி குடியிருப்புகளில் (சுயநிதித் திட்டம் மற்றும் வணிக மனைகள் நீங்கலாக) ஒதுக்கீடு பெற்று 31.03.2015ற்கு முன்பு தவணைக்காலம் முடிவுற்ற ஒதுக்கீடுதாரர்களுக்கு தமிழ் நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை எண் (நிலை).116 நாள் 04.08.2025இன் படி வட்டி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட சலுகையினை பெற ஒதுக்கீடுதாரர்களால் 31.03.2026-க்குள் நிலுவைத் தொகையினை ஒரே தவணையாக செலுத்தப்படவேண்டும். மாத தவணைக்கான அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி. வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி முழுமையாக தள்ளுபடி. நிலத்திற்கான இறுதி விலை வித்தியாசத் தொகையில் ஒவ்வொரு ஆண்டும் 5 மாத வட்டித் தள்ளுபடி.
கடந்த 31.03.2015-ற்கு முன்னர் தவணை காலம் முடிவுற்ற ஒதுக்கீடுதாரர்கள் நிலுவைத் தொகையினை அறிந்து ஒரே தவணையில் தொகையினை செலுத்தி மேற்கண்ட வட்டிச் சலுகையை பயன்படுத்தி கிரயப் பத்திரம் பெற்று கொள்ளலாம் என்
தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments