Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகன் உடல்நலக் குறைவால் காலமானார்!

கடந்த 02.10.2019-ம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி மார்ட்டில் தரைதளத்தின் பின் சுவற்றில் துளையிட்டு உள்ளே சென்று தங்க நகைகள், வைரம் மற்றும் பிளாட்டினம் திருடப்பட்டது தொடர்பாக கோட்டை குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல்துறை 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

Advertisement

இந்நிலையில் கிடைத்த தகவலின்பேரில் மணிகண்டன் என்பவரை கைது செய்தும், அவரிடமிருந்து 4 கிலோ 250 கிராம் எடையுள்ள தங்க நகைகளை கைப்பற்றியும், திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை கைப்பற்றியும், மேலும் கனகவள்ளி என்பவரை கைது செய்தும், அவரிடமிருந்து 450 கிராம் எடையுள்ள தங்க நகைகளை கைப்பற்றியும், கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 கைப்பற்றப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.1,76,25,000-(ரூபாய் ஒரு கோடியே எழுபத்து ஆறு இலட்சத்து இருபத்து ஐந்தாயிரம்) ஆகும். 

மேலும் மேற்படி வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளான சுரேஷ், மற்றும் முருகன் ஆகிய இருவரையும் தேடி வந்த நிலையில் குற்றவாளி சுரேஷ் என்பவர் 10.10.2019 அன்று முற்பகல் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்ததன் பேரில் குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்கள் குற்றவாளி சுரேசை 14.10.2019 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். 

Advertisement

அதன்படி குற்றவாளி சுரேஷ் திருச்சி மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டார். மேலும் தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளி முருகன் என்பவர் பெங்களுர் 11வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

திருச்சி மாநகர காவல்துறை தனிப்படையுடன் சேர்ந்து குற்றவாளி முருகன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின்பேரில் திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூசத்துறை காவிரி ஆற்றுப்படுகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த திருச்சி லலிதா ஜூவல்லரியில் திருடப்பட்ட சுமார் ரூ.4,30,00,000 – (ரூபாய் நான்கு கோடியே முப்பது இலட்சம்) மதிப்புள்ள 12 கிலோ தங்க நகைகளை கைப்பற்றினர்.

இந்நிலையில் கடந்த ஆறு மாத காலமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகன் இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். அவருடைய இறுதி சடங்கு திருவாரூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *