திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் நடைபாதை விற்பனையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் அடையாள அட்டை வழங்குதல் ஆகிய பணிகளின் அவசர அவசியம் கருதி, சாலையோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு முடிக்கப்பட்ட 5231 வியாபாரிகளில் சில வியாபாரிகளின் பெயர்கள் விடுபட்டுள்ளதாகவும்,

கூடுதல் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் சாலையோர வியாபாரிகளின் சங்கங்கள் மற்றும் பிரதிநிதிகள் கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து விடுபட்ட சாலையோர வியாபாரிகளை கண்டறிந்து வியாபாரிகள் வியாபாரம் செய்யும் இடத்திற்கு சென்று கூடுதல் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படட்டது.

இம்மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விடுபட்ட 989 சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு பணிகள் அனைத்தும் தற்போது முடிக்கப்பட்டுள்ள நிலையில் இம்மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு செய்யப்பட்ட மொத்தம் 6220 சாலையோர வியாபாரிகளின் வாக்காளர் பட்டியல் விவரங்கள் வார்டு குழு அலுவலக வாரியாக அனைத்து சாலையோர வியாபாரிகளும் பார்வையிடுவதற்கு ஏதுவாக இம்மாநகராட்சியின் அனைத்து வார்டுகுழு அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.

சாலையோர வியாபாரிகளின் வாக்காளர் பட்டியல் விவரங்களில் ஏதேனும் திருத்தம், பிழை அல்லது நீக்கம் செய்ய விரும்பும் வியாபாரிகள் (30.11.2024) முதல் (16.12.2024) ஆம் தேதி வரை அந்தந்த வார்டுகுழு அலுவலக உதவி ஆணையர் அவர்களிடம் உரிய சான்று மற்றும் ஆவணங்ளுடன் விண்ணப்பிக்குமாறு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments