திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் புதிய ஆம்னி பேருந்து நிலையத்தை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்
திருச்சி பஞ்சப்பூரில் ஆம்னி பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு (IBT) அருகில் கட்டப்பட்டு வந்த நிலையில்
கட்டுமான பணிகள் முடிவடைந்து இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தொடங்கி வைக்கிறார்.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளுக்கு வசதியாக இருக்கவும் உதவுகிறது, சுமார் ₹17.60 கோடி செலவில் 4 ஏக்கர் பரப்பளவில், 82 பேருந்து நிறுத்தங்களுடன் கூடிய இந்த நிலையம், இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர். நாங்கள் ஊழல் வழக்கு பதிவு செய்வதற்காக ஒப்புதல் தமிழ்நாடு ஆளுநரிடம் கொடுத்தோம் அவர் அதற்கு ஒப்புதல் தரவில்லை.
அதிமுக தற்பொழுது உங்கள் மீது (நேரு) வழக்கு பதிவு செய்ய சொல்லி உள்ளது குறித்து அவர் வழக்கறிஞர் (இன்பதுரை) என பதில் அளித்தார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிய பொழுது சொல்றாங்க சார் என பதில் அளித்தார்.
அதிமுகவுடன் பாமக அன்புமணி கூட்டணி பேச்சுவார்த்தை முடிவு செய்தது குறித்து கேட்டதற்க்கு கடந்த தேர்தலில் அவர்கள் அவர்களோடு தான் ஒன்றாக இருந்தார்கள் ராமதாஸ் திமுக பக்கம் வருவாரா குறித்து கேள்வி எழுப்பிய பொழுது மழுப்பல் பதில்.
பஞ்சப்பூரில் தந்தை பெரியார் சந்தை கட்டும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. பெரியார் சந்தை ஒரு மாதத்தில் திறக்கப்படும். சரக்கு வாகன முனையம் காந்தி சந்தையுடன் செயல்பட துவங்கும்
முதலில் மொத்த விற்பனைக்கான தந்தை பெரியார் சந்தை வளாகம் கட்டி முடிக்கப்படும் .பிறகு சில்லறை வளாக கட்டிடம் பின்னர் கட்டப்படும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments