Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's identities

தென்னிந்திய ரயில்வே பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் திருச்சி ரயில் அருங்காட்சியகம்

No image available

திருச்சி மாநகரம் என்றாலே பல்வேறு வரலாற்று பொக்கிஷங்கள் நிறைந்தது தான்  ஏன் திருச்சி மாநகரமே வரலாற்றின் பொக்கிஷம் தான்

சுதந்திர இந்தியாவிற்கு முன்பில் இருந்தே திருச்சி மாநகரம் சிறப்பு வாய்ந்ததாக விளங்கி வருகிறது.

இந்த கோடை காலத்தில் பொழுதுபோக்கோடு வரலாற்றையும் உங்கள் குழந்தைகளும் வீட்டில் உள்ள பெரியவர்களும் அறிந்து கொள்ளலாம் …

திருச்சி ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது ரயில் அருங்காட்சியகம்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மிக சிறந்த ரயில்வேவாக திருச்சி கோட்டம் செயல்பட்டு வந்தது.

ரயில்வே அருங்காட்சியகம் 2014-ம் ஆண்டு பிப்.18-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. ரூ.1.35 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் பழைய தென்னக ரயில்வேயின் சிறப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

வெளிப்புற கண்காட்சி உட்புற கண்காட்சி என்று பார்க்கவே பிரம்மாண்டமாக இந்த ரயில் அருங்காட்சியகம் உள்ளது.

ரயில் தொடர்பான பழைய கலைப்பொருள்கள் மற்றும் புகைப்படங்கள், அரிய ஆவணங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை வருங்கால சந்ததியினருக்காகப் பாதுகாத்து வைக்க அமைக்கப்பட்டது. இவ்வருங்காட்சியகம் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் சுவாரஸ்யமான வரலாற்று கால முன்னேற்றங்களையும் கால வரிசைப்படி வழங்குகிறது.

தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் இந்த ரயில்வே அருங்காட்சியகத்தை பராமரித்து வருகின்றனர்.

ஆங்கிலேயர் கால ரயிலின் மாதிரி இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

வெளிப்புற கண்காட்சியில் சில பழங்கால நீராவி இன்ஜின்கள், 1930-ல் கட்டப்பட்ட கோச், பழைய நீராவி இன்ஜின், இங்கிலாந்து கம்பெனி பயன்படுத்திய வாகனம் ஆகியவை உள்ளன.

 குழந்தைகளை மகிழ்விக்க சிறிய ரயில் இயக்கப்பட்டு வருகிறது குழந்தைகளுக்கு என்று பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி அருங்காட்சியகத்தில் உள்ள ஆவணங்கள், புகைப்படங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் கோடை விடுமுறையை பொழுதுபோக்காக மட்டும் கழிக்காமல் இது போன்ற இடங்களுக்கு அழைத்து செல்லும் பொழுது அவர்கள் தங்கள் ஊரைப்பற்றிய வரலாற்றையும் அறிந்து கொள்ள உதவுகிறது .

பயணம் செய்ய விரும்பும் நபர்களுக்கு ரயில் பயணம் என்பது மனதுக்கு நெருக்கமானதாக இருக்கும். அப்படி ரயில் பயணத்தை விரும்புபவர்களுக்கும், உலகின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றான இந்திய ரயில்வே துறை குறித்து அறிய விரும்புபவர்களுக்கும் ரயில் அருங்காட்சியகம் என்பது பிரமிப்பான அனுபவத்தைத் தரும் 

ஆம் திருச்சி மாநகரம் வரலாற்றின் பொக்கிஷம் தான்..

 தொகுப்பு :தமிழூர் கபிலன்

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *