தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த தூய்மையான நகரங்களை தேர்ந்தெடுத்து தர வரிசை அறிவித்து வருகிறது.

இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தூய்மையான நகரங்களின் தர வரிசையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தமிழகத்தில் முதல் இடத்தை பெற்றுள்ளது.


இன்று (11.01.2024) தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், தமிழ்நாட்டின் சிறந்த தூய்மை நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருச்சி மாநகராட்சிக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட விருதுகளை,


மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments