அமெரிக்காவில் நடைபெற்ற டாம் ஒஸ்போர்ன் 2026 ரோலர் ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீரர் நிஷாந்த் வீரராகவன்
திருச்சி, ஜூன் 2026:
சி.வி.பி. ஸ்போர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த ரோலர் ஹாக்கி வீரர் நிஷாந்த் வீரராகவன், அமெரிக்காவின் கொலராடோ ஸ்பிரிங்ஸில் மே 28 முதல் ஜூன் 4, 2026 வரை நடைபெற்ற டாம் ஒஸ்போர்ன் 2026 ரோலர் ஹாக்கி போட்டியில் இந்திய ஹாக்ஸ் (Indian Hawks) அணிக்காக விளையாடி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

போட்டி முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிஷாந்த், தனது அணியின் சாம்பியன் பட்ட வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.நிஷாந்த் ஏற்கனவே இந்திய அணிக்காக பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய ரோலர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியுடன் வெள்ளிப் பதக்கம் வென்றதுடன், உலக ரோலர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியிலும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

அவரது இந்த தங்கப் பதக்க வெற்றி திருச்சி மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது. மேலும், இந்திய ரோலர் ஹாக்கி விளையாட்டின் வளர்ச்சிக்கும் இந்த வெற்றி ஊக்கமளிப்பதாக விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube



Comments