20வது ஏசியன் ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி சவுத் கொரியாவில் நடைபெற்றது. சீனியர் ஆண்களுக்கான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 7 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இதில் ஆறு போட்டிகள் நடைபெற்றது. இந்திய அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வியுற்று வெள்ளி பதக்கத்தை பெற்றது.
இந்த போட்டிகள் கடந்த ஜூலை 23ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதி வரை நடைபெற்றது. முக்கியமாக இந்திய அணிக்கு கெவின் திருச்சி வடுகப்பட்டி ஹாக்கர்ஸ் ஸ்கேட்டிங் கிளப்பை சேர்ந்த கெவின் இந்திய அணிக்காக விளையாடி இன்று திருச்சிக்கு திரும்பினார். அவருக்கு மாலை அணிவிக்கப்பட்டு பேண்ட் வாத்தியத்துடன் ஹாக்கர் ஸ்போட்டிங் கிளப் சார்பாக வரவேற்பு அளித்தனர்.
மிக முக்கியமாக இந்த போட்டியில் பங்கேற்ற கவின் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்த பொழுது போட்டியில் 10 வீரர்களின் ஒருவராக பயிற்சி ஆட்டத்தில் இருந்தேன். அதன் பிறகு மைதானத்தில் விளையாடும் முக்கிய ஐந்து வீரர்களில் ஒருவராக பங்கேற்று விளையாடினேன். தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான வீரர்கள் இந்தியாவிற்கு விளையாட தேர்வாதில் மிகுந்த கடினமாக உள்ளது. காரணம் இவர்களின் தேர்வுகள் அனைத்தும் வடமாநிலங்களில் நடைபெறுகிறது. மொழி ஒரு பிரச்சனையாக உள்ளது. மேலும் வீரர்கள் தேர்வு இதையெல்லாம் தாண்டி இந்திய அணிக்காக விளையாடி பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது.
தமிழ்நாடு அரசு ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி வீரர்களுக்கு உதவிகளை செய்து வருகிறது. மேலும் அவர்களுக்கு கூடுதல் உதவிகளை செய்து பயிற்சிக்கான கட்டணங்களை கொடுத்தால் உதவிகரமாக இருக்கும் ஒரு மாதம் வரை இந்த பயிற்சி வட இந்திய மாநிலங்களில் நடைபெறுவதால் ஏழை எளிய மாணவர்கள் பங்கேற்பதில் சிரமத்திற்கு ஆளாகின்றனர் . கெவின் பயிற்சியாளர் பசூல் கரீம் செய்தியாளருக்கு பேட்டியளித்த பொழுது 10,500
சதுர மீட்டரில் ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கிக்கு மைதானம் தமிழ்நாடு அரசு அமைத்து கொடுத்தால் இந்தியாவிற்கு அதிகமான பதக்கங்களை தமிழ்நாடு வீரர்கள் பெற்று தருவார்கள் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
Comments