தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நாளை 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7:00 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தர விருக்கின்றார். திருச்சிக்கு வருகை தரும் தமிழக முதல்வர் – கழக தலைவர் அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பும், மறுநாள் 10 ஆம் தேதி காலை 11:00 மணிக்கு திருவெறும்பூர் தொகுதி, பொன்மலைபட்டி பகுதியில் பாவை பவுண்டேஷனில் நடைபெறும் முதியோர்களின் பராமரிப்பிற்காக
‘அன்புச் சோலை’ திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சிகளில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறினார் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments