திருச்சி ஸ்ரீரங்கம் கீழவாசலில் உள்ள நுழைவுவாயில் கோவில் கோபுரத்தில் இரண்டு நிலைகளில் மேற்கூரை பூச்சுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. அபாயகரமான நிலையில் உள்ள இந்த கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கோபுரங்கள் மற்றும் மதில் சுவர்களை ஆய்வு செய்து, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோபுரத்தில் விரிசல். ரூ 67 லட்சம் செலவில் விரைவில் பராமரிப்பு பணிகள் துவங்க உள்ளதாக இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நள்ளிரவு இரண்டு மணி இரண்டாம் நிலையில் உள்ள காரைகளும் சிறிய தூண்களும் இடிந்து கீழே விழுந்து உள்ளது தற்பொழுது அந்த பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கோ போக்குவரத்தில் செல்வதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது உடனடியாக இதற்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோயில் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர் நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்ததால் யாருக்கும் எந்தவித ஆபத்து ஏற்படவில்லை.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments