Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's identities

2வது அலையிலும் தொடரும் உதவிகள் – தங்கள் நிறுவனத்தின் வாகனத்தையே முன்களப்பணியாளர்களுக்கு இலவச போக்குவரத்தாக மாற்றிய திருச்சி VDART நிறுவனம்

கொரோனா பெருந்தொற்று ஒருபுறம் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்ததோடு, பொருளாதார ரீதியாக பல இடர்பாடுகளை சந்திக்க வைத்தாலும் அதையும் எதிர்த்து பொதுமக்களுக்காக கடந்த 1 ஆண்டுகளுக்கு மேலாக களத்தில் இன்றளவும் பல்வேறு உதவிகளை செய்தும் திருச்சி ஐடி நிறுவனங்களுக்கு எல்லாம் ஒரு முன்னுதாரணமாக செயல்பட்டு வரும் VDart நிறுவனம் என்றால் அது மிகையாகாது.

Advertisement

திருச்சி VDart நிறுவனம் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை செய்து கொண்டே வருகின்றது. திருச்சியிலிருந்து திண்டுக்கல் மாவட்ட மலைவாழ் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியதும், கொரோனா காலகட்டத்தில் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்ததும், திருச்சி காவல்துறையினருக்கு சனிடைசர் வழங்கியது என கொரோனா காலகட்டத்திலும் தங்களின் உயிரை துச்சமென நினைத்து களத்தில் நின்று பணியாற்றிய முன் களப்பணியாளர்களுக்கு கௌரவிப்பு விழா நடத்தியது வரை சொல்லிக்கொண்டே போகலாம்.

கொரோனா 2வது அலை அதிதீவிரமாக நிலையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். தற்போது தளர்வுகளற்ள முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் முன்கள பணியாளர்களுக்காக VDart நிறுவனம் தன்னுடைய நிறுவனத்தின் வாகனத்தையே போக்குவரத்து வசதிக்காக அனுப்பி வைத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.

தற்போது முழு ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில், இதனை கருத்தில் கொண்டு திருச்சி VDart நிறுவனம் சார்பில் லால்குடி, துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வ திருச்சி காவிரி மருத்துவமனைக்கு வரும் முன்கள பணியாளர்களான செவிலியர்கள், மருத்துவர்கள் அழைத்துவர இலவசமாக தங்களுடைய சொந்த செலவில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளனர்.

இதுகுறித்து VDart நிறுவனத்தின் மேலாளர்கள் டெரிக் அலெக்ஸ் மற்றும் சங்கர நாராயணன் கூறுகையில்…. “கொரோனா ஆரம்பமான காலகட்டத்தில் முன்கள பணியாளர்களுக்கு எங்கள் நிறுவனத்தால் முடிந்த உதவிகளை செய்து வந்தோம். தற்போது இந்த 2வது அறையிலும் முன்கள பணியாளர்களுக்காக திருச்சி காவிரி மருத்துவமனைக்கு போக்குவரத்து வசதிக்காக எங்கள் நிறுவனத்தின் வாகனங்களை இலவசமாக தந்துள்ளோம். இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து உதவி செய்வோம்” என்றனர்.‌..

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *