திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அரசு மதுபாட்டில்கள் கள்ளசந்தையில் விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து நேற்று முத்துபுடையான்பட்டி மற்றும் செவலூர் பிரிவு ரோடு ஆகிய பகுதிகளில் போலீஸார் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது செவலூர் திருவிக தெருவை சேர்ந்த முருகேசன் மகன் பவிக்குமார்(26) மற்றும் முத்தபுடையான்பட்டி சிவக்குமார் மனைவி அமிர்தம்(36) ஆகியோர் அரசு மதுபாட்டில்கள் கள்ளசந்தையில் விற்கும்போது கையும் களவுமாக அவர்கள் இருவரையும் கைது செய்த மணப்பாறை போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடை த்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision






Comments