திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் ஸ்டுடியோ வைத்து நடத்தி வருபவர் ஹரிஹரன். இவர் மும்பைக்கு சென்று நாக்கை இரண்டாகப் பிளந்து டாட்டூ போட்டு வந்துள்ளார். நாக்கை பாம்பு போல் நீட்டி நாக்கு நீளும் காட்சியை இன்ஸ்டாகிராமிலும் பதிவு செய்துள்ளார். இவர் இங்கு வந்து தனது நண்பரான ஜெயராமனுக்கும் இதே போல் அறுவை சிகிச்சை செய்து டாட்டூ போட்டு உள்ளார்.

ஏலியன் எமோ ஸ்டூடியோ என்ற பெயரில் இவர் சட்டத்திற்கு புறம்பாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஹரிஹரன் மற்றும் ஜெயராமனை கோட்டை காவல் நிலை போலீசார் கைது செய்து உள்ளனர். தொடர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அதிர்ச்சிகர பல தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஹரிஹரன் கடந்த ஒரு வருட காலமாக இந்த ஸ்டுடியோவை வைத்து நடத்தி வந்துள்ளார். 7 மாதத்திற்கு முன்பாக மும்பைக்கு சென்று கண்களில் நீல நிறமாக மாற்றி 7 லட்ச ரூபாய் செலவில் நாக்கை இரண்டாக பிளந்து அறுவை சிகிச்சையும் செய்து வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வீடியோ செய்திகளை பார்த்து யாரும் இதுபோன்ற செயலில் ஈடுபடக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டுள்ளனர். இளைஞர்கள் யாரும் இது போன்று செயல்களில் ஈடுபட்டால் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். இது சட்டத்திற்கு புறம்பான செயல் என குறிப்பிட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments