திருச்சிராப்பள்ளி மாவட்டம் துவாக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அண்ணா வளைவு பகுதியில் கடந்த 13/4/2025 ஆம் தேதி பத்மா என்பவர் இறந்துவிட்டார். இறந்தவரது துக்க நிகழ்வுக்கு வந்த மாலதி என்ற பெண் தனது ஹேண்ட் பேக்கை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் மாட்டிவிட்டு துக்க நிகழ்விற்கு சென்று உள்ளார்.
அதன் பிறகு தனது ஹேண்ட் பேக்கை மறந்து அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார். ஹேண்ட் பேக்கில் ₹30,000 பணம் அரை கிராம் தங்கத்தோடு 3 ஆண்ட்ராய்டு போன் ஆகியவை இருந்துள்ளது. பின்னர் மாலதிக்கு அவரது ஹேண்ட் பேக் எங்கு வைத்தோம் என்று தெரியாமல் துவாக்குடி காவல் நிலையத்தில் அன்று புகார் அளித்தார்.
துவாக்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இருக்கும் சமயத்தில் அண்ணா வளைவு பகுதியில் இருந்த ஒரு இருசக்கர வாகனத்தில் ஹேண்ட் பேக் ஒன்று தொங்கிக் கொண்டிருந்ததாகவும் அதில் 30 ஆயிரம் பணம் அரை கிராம் தங்கத்தோடு ஆண்ட்ராய்டு போன் ஆகியவை இருப்பதாகவும் அருண் பிரசாத் மற்றும் எட்வர்ட் எடுத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட ஹேண்ட்பேக்கை சரிபார்த்த போது காணாமல் போனதாக கூறிய அனைத்தும் இருந்தது நிலையத்தினர் ஹேண்ட்பேக்கை உரியவரிடம் ஒப்படைத்து அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
பேக்கை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபர்களான அருண்பிரசாத் மற்றும் எட்வர்ட் ஆகிய இருவரின் நற்செயலை பாராட்டி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வரத்தினம் அவர்கள் இரு நபர்களையும் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி தன்னலமில்லா செயலை ஊக்குவித்தார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments