Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி வயலூர் கோவிலில் உறுதித் தன்மை இல்லாத மண்களை கொட்டும் பணி – விவசாயிகள் மண் மூட்டைகளுடன் போராட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணை மூட்டையாக அள்ளி வந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி வயலூர் முருகன் கோவில் வளாகத்தில் ரூபாய் 30 கோடியே 40 லட்சம் மதிப்பில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதில் 30 அடி ஆழம் வரை களிமண் நிறைந்த வயலூர் சதுப்பு நிலை ஈரத்தன்மை கொண்ட பகுதி. கட்டுமான அஸ்திவார பணியின் பொழுது பேஸ்மட்டம் தரைத்தளம் பணியின்போது கிரவல் மண்ணை கொட்டி பணிகள் மேற்கொள்ள வேண்டும். கட்டுமான பணியை முறையாக மேற்கொள்ளாமல் முறையற்ற கட்டுமான பணிகள் நடைபெறுவது கண்டிக்கத்தக்கது.

பக்தர்கள் பொதுமக்கள் அதிகம் கோவிலுக்கு வந்து இப்பகுதியை பயன்படுத்த இருப்பதால் உறுதியான மண்ணை கொட்டி பணிகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்து கிலோ எடை கொண்ட 12 சிப்ப மண் மூட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைக்க தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமையில் போராட்டம் நடத்தினர் தலையில் மண் மூட்டைகளுடன் சுமந்து சென்ற விவசாயிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்

தொடர்ந்து விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது ஒருவரை உள்ளே அனுப்புகிறேன் என காவல்துறையினர் குறிப்பிட்ட பொழுது நாங்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் மண் மூட்டைகளை உள்ளே எடுத்துச் செல்ல வேண்டும் என பதில் அளித்தனர் ஒரு மணி நேரம் வெயிலில் நின்று கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் விவசாயிகளின் இந்த போராட்டத்தினால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்தை கைவிடவில்லை.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *