Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வைகுண்ட ஏகாதசிக்கு கட்டண டிக்கெட், பாஸ் வாங்கிய பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு – நள்ளிரவில் அவதி – குழந்தைகளுடன் வெளியேறிய பக்தர்கள்

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் கடந்த (31.12.2024) ஆம் தேதி முதல் வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

முக்கிய நாளான இன்று ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆரியபடாளுக்குள்ளே கருவுல மேடை, கிளிமண்டபம், அர்ஜுன மண்டபம் பகுதிகளில் பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு என்று கிளிமண்டபம், அர்ஜுன மண்டபம், கருவூல மேடை அமர உள்ளிட்டவைகளுக்கு கட்டணத்தினால் பாஸ் வழங்கப்படும்.

மேலும் உபயதாரர் இலவச பாஸ்ம் கொடுக்கப்படும். இது மட்டுமல்லாமல் சந்தனு மண்டபத்தில் அமர்ந்து தரிசனம் செய்ய குறைந்த எண்ணிக்கையில் நான்காயிரம் ரூபாய்க்கு கட்டண டிக்கெட் கொடுக்கப்படும். அதிகாலை 05:15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுவதால் நள்ளிரவு இரண்டு மணிக்குள் பக்தர்கள் ஆரியபடாள் வாசலுக்குள்ளே இந்த மண்டபங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

அனுமதி பாஸ்களில் குறிப்பிட்டிருந்த 2 மணிக்கு முன்னரே நள்ளிரவு 1:30 மணிக்கு வந்தவர்கள் ஆரியபடாளுக்கு வெளியே கருட மண்டபம் பகுதியில் வரிசையில் நிற்க வைத்து நான்கு மணி வரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் தாங்கள் கை குழந்தையுடன் வந்திருக்கிறோம். அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் முன்னதாகவே வந்து விட்டோம் ஏன் எங்களை உள்ளே விட மறுக்கின்றனர். இதே போன்ற நிலை இனி எந்த நபருக்கும் வரக்கூடாது வரும் ஆண்டுகளிலாவது இதுபோன்ற சிரமம் ஏற்படாமல் பக்தர்களை உள்ளே அனுமதிக்க அறநிலையத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தாய் ஒருவர் தன் மகனுடன் வந்திருந்தார். கட்டணம் செலுத்தி உள்ளே பெருமாளை தரிசனம் செய்ய வந்து வாசலில் ஏன் காத்திருக்க வேண்டும். வீட்டிற்கு சென்று விடலாம் என தனது மகன் கூறியதால் அவர் மனம் நொந்து அவரது மகன் மற்றும் குடும்பத்தினருடன் கோயிலை விட்டு வெளியேறினார். ஒரு கட்டத்தில் பக்தர்கள் அனைவரும் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது பக்தர்கள் எங்களை ஏதோ குற்றவாளிகள் போல் காவல்துறையினர் படம் பிடிக்கின்றனர் என்று குற்றச்சாட்டையும் முன்வைத்தனர்.

ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் ஏன் பக்தர்களுக்கு பாஸ் கொடுப்பதில் இவ்வளவு குளறுபடிகளை செய்துள்ளது என்று அனைவரும் புலம்பியவாறு திரும்பி சென்றனர். இதேபோல், வெள்ளை கோபுரம் வழியாக உள்ளே வந்த பத்திரிக்கையாளர்களை காவல்துறை தடுத்து நிறுத்தினர். அப்பொழுது பத்திரிக்கையாளர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. கோயில் நிர்வாகம் கொடுத்துள்ள இந்த பாசை வைத்து உள்ளே செல்ல முடியாது பெயர், போட்டோ உள்ளிட்டவைகளை இருக்கும் பாஸ் கோயில் நிர்வாகம் கொடுத்து இருந்தால் அதை காண்பிக்கவும் என பிடிவாதமாக காவல் துறையினர் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசினார்.

இதனால் பத்திரிக்கையாளர்கள் காவல்துறையிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு உயர் அதிகாரிகள் பேசி சமாதானம் செய்து உள்ளே அனுப்பி வைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *