Site Logo mobile
Search Icon
Mobile Gif
Uncategorized

கையூட்டு வழக்கில் VAO-வுக்கு 2 ஆண்டு சிறை

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, திருச்சி

திரு.சங்கிலிகுருப்பன், ஆனாங்கரைப்பட்டி, குமரவாடி கிராமம், மணப்பாறை வட்டம், திருச்சி மாவட்டம் என்பவரின் மனைவி பஞ்சசல்யாணி இறந்துவிட்டார். அவர் பெயரில் இருந்த சொத்துகளை தனது பெயரிலும், தனது மகன்கள் பெயரிலும் பட்டா பெயர் மாற்றம் செய்து தர ரூ.2000/- கையூட்டாக கேட்டது தொடர்பாக திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, குமரவாடி கிராம நிர்வாக அலுவலர் திரு.சாமிக்கண்ணு என்பவர் மீது திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி ஊழல் தடுப்பு பிரிவில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மேற்கொண்ட பொறிவைப்பு நடவடிக்கையில்,புகார்தாரர்திரு.சங்கிலிகுருப்பனிடம் கையூட்டு பணம் ரூ.2,000/-ஐ கேட்டு பெற்ற போது எதிரி திரு.சாமிக்கண்ணு திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார். மேற்படி வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்று இன்று 29.05.2026 திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.பியூராக அவர்கள், திரு.சாமிக்கண்ணு, கிராம நிர்வாக அலுவலர், குமரவாடி கிராமம், மணப்பாறை தாலுகா, திருச்சி மாவட்டம் என்பவர் பட்டா பெயர் மாற்றம் செய்ய கையூட்டு கேட்டு பெற்ற குற்றத்திற்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மூன்று மாதம் சிறை தண்டனையும், சட்டப்படியான தனது கடமையை செய்வதற்கு மேற்படி லஞ்சப்பணம் கேட்டு பெற்ற குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5000/- அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் மூன்று மாத சிறைத்தண்டனையும் வித்ததோடு, மேற்கண்ட தண்டனைகளை ஏகாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டு தீர்பளித்துள்ளார்.

 

மேற்படி வழக்கினை திருமதி. F. சேவியர் ராணி, காவல் ஆய்வாளர், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அவர்கள் திறம்பட சாட்சிகளை ஆஜர் செய்து ஒத்துழைப்பு வழங்கியும், அரசு தரப்பு வழக்கறிஞராக திரு.கோபிகண்ணன் அவர்கள் திறம்பட வழக்கை நடத்தியும் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்துள்ளார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *