திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே உள்ள நங்கவரம் தென்கடை குறிச்சி பகுதியில் ஸ்ரீ தக்ஷன காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பெண்கள் வேண்டியதை நினைத்து அம்மனுக்கு விரதம் இருந்து விளக்கேற்றி அபிஷேகம் செய்வதால் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம்.

அந்த வகையில் திருச்சியை சுற்றியுள்ள பலரும் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர் . இந்நிலையில் நேற்று புரட்டாசி மாத மகாளய அமாவாசை என்பதால் அம்மனுக்கு வரமிளகாய் ஹோமம் சிறப்புஅபிஷேகம் மற்றும் குருதி பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது .

பூஜைக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தக்ஷிண காளி சித்தர் பீடத்தின் பீடாதிபதி தவத்திரு.அறம்மிகு அடிகளார் செய்திருந்தார் .இந்த பூஜையில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments