ந. ராஜேந்திரன் மண்டல துணைத் தலைவர் த. மா.கா விவசாய பிரிவு அவர்கள் (19/02/2025 ) அன்று குமார வயலூரில் நடந்த கும்பாபிஷேகம் வேத சாஸ்திரப்படி நடக்கவில்லை என்றும்,திருப்பணி வசூல் ரசீது இன்றி நடைபெற்றதாகவும் இந்து அறநிலைத்துணை ஆணையருக்கு நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்திருந்தார்.
இதற்கு இந்து அறநிலைத்துறை சார்பாக விசாரணை நடத்தி அதன் மூலம் இத்திருப்பணிக்காக தனி வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு திருப்பணி ரசீதுகள் முறையாக கொடுக்கப்பட்டுள்ளன. இக்குடமுழுக்கு விழா ஆகம விதிக்கு உட்பட்டு அனைத்து தரப்பினரையும் அழைத்து வெகு விமர்சியாகவே கொண்டாடப்பட்டது.
அனைத்து அரசு துறை அலுவலர்களுக்கும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தி பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் பாதுகாப்பு வசதிகளும் முறையாக ஏற்படுத்தப்பட்டது. அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். என்று மனுதாரருக்கு கூறப்படுகிறது.
மனுதாரர் அளித்த கோரிக்கை ஏற்கப்பட்டு அனைத்து விவரங்களும் அவருக்கு தபால் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.இந்து அறநிலைத்துறை எம் லட்சுமணன் உதவி ஆணையர் அவர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments