திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்திற்கான திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை நற்பணி மன்றம் சார்பில் வேட்டையன் படத்தின் ஸ்டிக்கர் வெளியீட்டு விழா திருச்சி சோனா திரையரங்கில் மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் எஸ்.சுதர்சன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எல். ஏ.சினிமாஸ் அதிபர் தொழிலதிபர் ஜோசப் பிரான்சிஸ் அடைக்கலராஜ் கலந்துகொண்டு ஸ்டிக்கரை வெளியிட திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை நற்பணி மன்ற நிர்வாகிகள் ராயல் ராஜ், எஸ்.டி. ராஜ், உதயன், காமராஜ், கண்ணன், பாபு, நோபல் அலெக்ஸ், மற்றும் திரளான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments