திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் வாகன விபத்துகள், ஒலி மாசு ஆகியவற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே.பாலகிருஷ்ணன், அவர்கள் அறிவுறுத்தலின்படி மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் கடந்த 14.02.2026, 15.02.2026 ஆகிய இரு தினங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு மொத்தம் 916 டிராக்டர்கள் (திருச்சி 259, புதுக்கோட்டை 217, கரூர் 73, பெரம்பலூர் 76, அரியலூர் 66, தஞ்சாவூர் 49, திருவாரூர் 98, நாகப்பட்டிணம் 32 மற்றும் மயிலாடுதுறை 46 வாகனங்களை ஆய்வு செய்து, அதில் 822 டிராக்டர்களுக்கு
(திருச்சி 259, புதுக்கோட்டை 195, கரூர் 73, பெரம்பலூர் 76, அரியலூர் 66, தஞ்சாவூர் 25, திருவாரூர் 61, நாகப்பட்டிணம் 32 மற்றும் மயிலாடுதுறை 35) வாகன விபத்தை தடுக்கும் பொருட்டு வாகனத்தின் பின்புறத்தில் பிரதிபலிப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும் அதிக ஒலி எழுப்பும் வாகனங்களை கண்டறிய மாவட்ட வாரியாக வாகன கள ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் 372 கனரக வாகனங்கள் (திருச்சி 119, புதுக்கோட்டை 47, கரூர் 33, பெரம்பலூர் 34, அரியலூர் 49, தஞ்சாவூர் 32, திருவாரூர் 13, நாகப்பட்டிணம் 10 மற்றும் மயிலாடுதுறை 35)
சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதில் 229 வாகனங்களுக்கு (திருச்சி 69, புதுக்கோட்டை 27, கரூர் 31, பெரம்பலூர் 24, அரியலூர் 48, தஞ்சாவூர் 18, திருவாரூர் 7, நாகப்பட்டிணம் 3 மற்றும் மயிலாடுதுறை 2) வட்டார போக்குவரத்து அலுவலர்கள் (RTO) மூலமாக அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டது
மேலும் மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் தொடர் வாகன சோதனைகள் நடத்தி வாகன விபத்துகளை தடுக்கும் பொருட்டு
வாகனங்களுக்கு பிரதிபலிப்பு ஸ்டிக்கர் மற்றும்
அதிக ஒலி எழுப்பும் வாகனங்களின் காற்று ஒலிப்பான்களை அகற்ற மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments