திருச்சி மாவட்டம், திருப்பைஞ்சீலி அருகே உள்ள மூவராயன்பாளையம் கிராமத்தில் நல்லாயி அம்மன் கோவில் உள்ளது.இந்த கோவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து 48 வது நாள் மண்டல பூஜையை முன்னிட்டுகிராம மக்கள் புனித நீர் எடுப்பதற்காக முக்கொம்பு காவிரி ஆற்றிற்கு சென்றுள்ளனர்.
அங்கு குடங்களில் புனித நீரை எடுத்த கிராம மக்கள் புறப்பட தயாராகியபோதுசிலர் வான வெடி வெடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்படி வெடிப்பதற்காக வானத்தை நோக்கி வீசப்பட்ட வெடி ஒன்றுமரத்தில் பட்டு கீழ் நோக்கி வந்து பூவரசன் – மனோகரி தம்பதியின்
மகள் ஹனிக்கா என்ற இரண்டரை வயது சிறுமி மீது விழுந்து வெடித்துள்ளது.இதில் பலத்த அந்த சிறுமி பலத்த காயமடைந்து அலறி துடித்துள்ளார்.உடனடியாக சிறுமியை சிகிச்சைக்காக அருகில் உள்ள சிறுகாம்பூர் அரசு மருத்துவமனைக்கு கிராம மக்கள் கொண்டு சென்றனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது
சிறுமி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து தகவலறிந்த வாத்தலை போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துசிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி பெற்றோரிடம் உடலை ஒப்படைத்தனர்.
தொடர்ந்து சிறுமியின் உடலை நல்லடக்கம் செய்வதற்காக ஆம்புலன்ஸ் கிராமத்திற்கு கொண்டு சென்றபோது கிராம மக்கள் சிறுமியின் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் பார்ப்பவர்களின் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது.
கிராம கோவிலின் 48வது நாள் மண்டல பூஜையை சிறப்பாக கொண்டாடுவதற்காகவிழா கோலமாக காட்சியளித்த மூவராயன்பாளையம் கிராமம் சிறுமி ஹனிக்காவின் இந்த துயரமான இறப்பினால் தற்போது பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments