தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, பெயர் நீக்கம், பிழைத் திருத்தம் முகவரி மாற்றம் ஆகியவற்றிற்காக சிறப்பு வாக்காளர் முகாம் இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது.

Advertisement
அந்த வகையில் திருச்சி திருவானைக்கோவில் பள்ளியில் இன்று காலை வாக்காளர் சிறப்பு முகாம் தொடங்கியது. இதில் அப்பகுதியில் இருந்து பலர் கலந்துகொண்டு பெயர் மாற்றம் மற்றும் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

Advertisement



Comments