திருச்சி கண்டோன்மெண்ட் ரெனால்ட்ஸ் ரோடு பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி உள்ளது. இதன் எதிர்ப்புறம் உள்ள சாலையில் குடிநீர் குழாய் உடைந்து நீர் சாலையில் வழிந்து செல்கிறது.

மேலும் அந்த சாலையில் பள்ளம் ஏற்பட்டு ஊற்றுப்போல பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாக சாக்கடைகள் கலக்கிறது. இந்த குழாய் உடைப்பு காரணமாக அந்த சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் மரக்கிளையை கொண்டு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாநகரின் பிரதான சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு வீணாக தண்ணீர் செல்வதை அவ்வழியாகச் செல்லும் யாரும் கண்டும் கொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக சமுக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து சேதமான சாலையை சரி செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments