திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தும்பலம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. இதில் அரசுத் துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களின் பார்வைக்கு அமைக்கப்பட்ட திட்ட விளக்கக் கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
இம்முகாமினையொட்டி பொது மக்களிடமிருந்து ஏற்கனவே பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவாய்த்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, வேளாண்மைத் துறை,
கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 520 பயனாளிகளுக்கு ரூ.94.84 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஊராட்சித் தலைவர் த.இராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் த.மாதவன், தனித் துணை ஆட்சியர் என்.செல்வம், வட்டாட்சியர் ஜெ.சண்முகப்பிரியா, ஒன்றியக்குழு தலைவர் சர்மிளா பிரபாகரன்,

ஊராட்சித் தலைவர் சரளா ஜெயக்குமார், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO







Comments