திருச்சியில் எந்தெந்த Spa மசாஜ் சென்டர் போலியானது? புகைப்படங்களை வெளியிட்ட போலீசார்!!
திருச்சி மாநகரில் ஸ்பா மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வரும் நபர்களை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இன்று அதிரடி சோதனையில் இறங்கினர்.
இந்நிலையில் கருமண்டபத்தில் தர்ஷினி ஆயுர்வேதிக் ஹேர் ஸ்பா என்ற பெயரிலும், பொன்னகரில் ஆரஞ்சு ஸ்பா என்ற பெயரிலும், LIC காலணியில் ஹெவன்லி ஸ்பா என்ற பெயரிலும், வில்லியம்ஸ் ரோடு ஆகிய இடங்களில் தனிப் படையினர் சோதனையில் தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த கண்மணி முருகன், திருச்சி பெரிய கடை வீதியை சேர்ந்த தர்மேந்திரா, வையம்பட்டியைச் சேர்ந்த கோபிநாத், திருவரம்பூர் ஐச் சேர்ந்த பிரவீன் மற்றும் திருச்சி லால்குடி சேர்ந்த அஜித் ஆகியோர் ஸ்பா என்ற பெயரில் 10 பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் 5 பேரை நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றகாவலுக்கு அழைத்துச்சென்றனர் மீட்கப்பட்ட 10 பெண்களின் திருச்சி மருத்துவமனை பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய…https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP