திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஜீயபுரம் மற்றும் பெட்டவாய்த்தலை வழியாக குளித்தலை வரை செல்லும் நகரப் பேருந்துகளின் கால அட்டவணையை பொதுமக்களின் வசதிக்காக சத்திரம் பேருந்து நிலையத்தில் வைக்க வேண்டும் என்று தமிழக முதல்வரின் முகவரி துறையிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனுவை ஏற்று கொண்ட தமிழக முதல்வரின் முகவரி துறை, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு பேருந்துகளின் கால அட்டவணியை வழங்கியதுடன், பெட்டவாய்த்தலை பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தில் வைக்கப்படும் தெரிவித்திருந்தனர்.

ஆனால் முதல்வர் முகவரி துறை வழங்கி இரண்டு மாதங்கள் ஆகிய நிலையில் இன்றுவரை சத்திரம் பேருந்து நிலையத்தில் அந்த கால அட்டவணை வைக்கவில்லை. இதுகுறித்து கோரிக்கை வைத்த ஓய்வுபெற்ற விமான படை அதிகாரி தங்கராஜ் அவர்களிடம் பேசினோம்,

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஜீயபுரம், பெட்டவாய்த்தலை வழியாக குளித்தலை செல்லும் பேருந்துகளின் அட்டவணையை கேட்டு திருச்சி போக்குவரத்து நிர்வாகத்திடம் கேட்டிருந்தோம், ஆனால் பலமுறை கேட்டு கிடைக்காத நிலையில் முதல்வரின் முகவரி துறைக்கு கோரிக்கை மனு வைத்த நிலையில், மனுவை ஏற்றுக்கொண்ட முகவரி துறையினர் பேருந்து அட்டவணையை அளித்ததுடன், அதனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கால அட்டவணை தகவல் பலகை வைக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தனர்.

இன்றுவரை அட்டவணை பேருந்து நிலையத்தில் வைக்கப்படாத நிலையில், வழங்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள பேருந்துகள், குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதில்லை, குறிப்பாக சில தனியார் பேருந்துகள் இந்த சாலை மார்க்கத்தில் வருவதே இல்லை, இதனால் பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி செல்லும் குழந்தைகள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.

பயணிகளின் நலன் கருதி பேருந்து கால அட்டவணையை சத்திரம் பேருந்து நிலையத்தில் வைக்க வேண்டும் என கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்
அறிய…
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           134
134                           
 
 
 
 
 
 
 
 

 21 October, 2024
 21 October, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments