திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானா அருகே முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது இருசக்கர வாகனத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் ஏற்றிவந்த நபர் ஒருவர் எதிர்பாராதவிதமாக இடித்து நின்றுள்ளார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதனை பார்த்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த அபிராமன் மகள் கிரிஜா (28) என்ப வர் தான் வக்கீல் என கூறி /பணியில் இருந்த போக்குவரத்து போலீசாரிடம், ‘நீங்கள் என்ன பணி செய்கிறீர்கள் சிலிண்டர் வெடித்தால் பொதுமக்களுக்கு என்னவாகும்’ என வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் ஒருமையில் பேசி பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து போலீஸ்காரர் அரசு கொள்ளிடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கமுற்படுதல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கிரிஜாவை கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள மகளிர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று சிறைக் காவலர்களைத் தாக்கியதாகவும், தகராறு செய்ததாகவும் கிரிஜா மீது காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் மற்றுமொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு காந்திமார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய சிவக்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கிரிஜா திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து, ஊடகங்களில் பேட்டியும் அளித்தார்.

அதன் காரணமாக காவல் ஆய்வாளர் சிவக்குமார் பணியிட மாற்றம் செய்யப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பல் வேறு இடங்களில் தான், ஒரு பத்திரிகையாளர் எனவும், வக்கீல் எனவும் கூறி மிரட்டி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments