கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.ஆர்.பி தேர்வில் தேர்வான 400க்கும் மேற்பட்ட வட இந்தியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி ஆணை வழங்கும் பணி திருச்சி பொன்மலை ரயில்வே மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
400க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் சான்றிதழ்களுடன் வெளியில் காத்திருக்கின்றனர். இவர்கள் ஒரிசா மகாராஷ்டிரா ராஜஸ்தான் போன்ற வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது மாநில அரசிடம் இ- பாஸ் பெற்று விமானம் மூலம் வந்துள்ளனர். திருச்சி விமான நிலையத்தின் சார்பில் இவர்களுக்கு கொரோனா பிசிஆர் பரிசோதனை எடுக்கப்பட்டு முடிவுகள் வந்த பின்னரே இவர்கள் இங்கு வந்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அனைத்து பணியிடங்களும் வட மாநிலத்தவர்களுக்கு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக ரயில்வேயில் அப்ரண்டீஸ் பணியில் உள்ளவர்கள் பொன்மலை இரயில்வே மண்டபத்தின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
400க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் இருக்கும் இடத்தில் தமிழர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால் இப்பகுதி பரபரப்பாக உள்ளது.



            
            
            
            
            
            
            
            
            
            
Comments