திருச்சியில் உலக நாய்க்கடி நோய் தினம் (World Rabies Day) 2025 முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு நடைபயணம் செப்டம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை, Students Road (Court), திருச்சியில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியை பெட் கேலக்ஸி, ரொட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி பட்டர்ஃபிலீஸ், ரொட்டரி கிளப் ஆஃப் திருச்சி நெக்ஸ்ட் ஜென், மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக NSS செல் இணைந்து நடத்துகின்றன.
முதன்மை சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கௌரவ விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுநர் Rtn. J. கார்த்திக் சிறப்பு அழைப்பாளர் டாக்டர் எஸ். கணேஷ் குமார், கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் டி. பிரசன்னா பாலாஜி, தேசியக் கல்லூரி துணை முதல்வர்
இந்த நடைபயணத்தில் பங்கேற்கும் செல்லப்பிராணிகளுக்காக இலவச நாய் கடி தடுப்பு தடுப்பூசி (Free ARV for pets) வழங்கப்படுகிறது.
இதற்கு ரொட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி பட்டர்ஃபிலீஸ் தலைவர் Rtn. S. நித்யா, செயலாளர் Rtn. M. ரேவதி, ரொட்டரி கிளப் ஆஃப் திருச்சி நெக்ஸ்ட் ஜென் தலைவர் Rtn. A.அப்துல் ரஹீம், செயலாளர் Rtn. R. பிரபு, ரொட்டரி கிளப் தலைவர் Rtn. R. செல்வராஜ் செயலாளர் Rtn. S. பாலசுப்பிரமணியன் ஒருங்கிணைப்பு வழங்குகின்றனர்.மேலும் விவரங்களுக்கு திருச்சி ரொட்டரி கிளப் அலுவலகங்களை தொடர்பு கொள்ளவும்.மக்களிடையே நாய்க்கடி நோய் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடைபயணம் நடத்தப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments