திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் பாலத்திற்கு கீழ் சென்ற கார் திடீரென அப்படியே நடுரோட்டில் நின்று விட்டது. இதனால் பின்னால் வந்தவர்கள் ஒலி எழுப்பியும் கார் செல்லாததால் சிலர் சத்தம் போட ஆரம்பித்தனர். பின்பு போக்குவரத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போக்குவரத்து காவலர் காரின் கதவை திறந்த போது அந்த காரை ஓட்டி வந்த ஓட்டுனர் ஸ்டேரிங்கில் அப்படியே படுத்து கிடந்துள்ளார்.

Advertisement
ஓடிக் கொண்டிருந்த காரில் திடீரென ஸ்டேரிங்கில் படுத்து மூச்சின்றி இருந்ததால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தனியார் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து அவரை ஏற்றும் போதே உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கேகே நகர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். மேலும் அவர் வந்த காரின் பதிவு எண் மற்றும் காரின் உள்ளே இருந்த சில தகவல்களை வைத்து சந்திரசேகர், ஜீவா நகர், காரைக்குடி என எழுதப்பட்டிருந்தது. இதனை வைத்து போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Advertisement
 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           126
126                           
 
 
 
 
 
 
 
 

 29 November, 2020
 29 November, 2020





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments