மாவட்டங்களுக்கிடையேயான ஆணழகன் போட்டி நெக்ஸஸ் – 2025 திருச்சி செம்பட்டு அருகில் உள்ள உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இதில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாமக்கல், சேலம், திண்டுக்கல், ஈரோடு, நாகை மற்றும் திருவாரூர் என 22மாவட்டங்களில் இருந்து 323பேர் பங்கேற்று இருந்தனர். 50, 55, 60, 65, 70, 75 மற்றும் 80கிலோ எடைபிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் நீண்டகாலம் உடற்பயிற்சிகளை மேற்கொண்டிருந்த இளைஞர்கள் தங்களது உடலை மெருகேற்றி கட்டழகுடன் மேடையில் தோன்றி இசைக்கேற்ப பலவித உடல்பாவணைகளைச் செய்தனர்.
ஏராளமான பார்வையாளர்கள் மேடையில் தோன்றி கட்டுடலை காட்டி அசத்திய ஆணழகர்களுக்கு தங்களது கரங்களைத் தட்டி உற்சாகப்படுத்தி பாராட்டுக்களைத் தெரிவித்தனர். பல்வேறு பிரிவுகளில் முதல் 5 இடங்களைப் பிடித்த வீரர்களுக்கு ஆணழகன் சான்றிதழ்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments