திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் பொதுமக்களின் கவனத்தை ஈர்பது என்ற பெயரில் அரசு பேருந்தின் முன் புஷ்-அப் எடுப்பது போன்றும், சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பைக் சாகசத்தில் ஈடுபட்டும் அதனை இன்ஸ்டாகிராமில் Reels ஆக பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டு அவரது இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் எடுக்கப்படும் சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டது.
மேற்படி, இதுபோன்று பைக் சாகசங்கள் செய்யும் நபர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பயங்கர ஆயுதங்களுடன் Reels எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரப்படுகின்றனர்.
மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சி மாவட்டத்தில் பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் Reels பதிவிடும் நபர்கள் பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவிக்க ☎️ 8939146100 என்ற 24 மணி நேரமும் செயல்படும் மாவட்ட காவல் அலுவலக வாட்ஸ்ஆப் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments