ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு பகுதியில் செயல்பட்டுவரும் லூப்ரா பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சேவை மையத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட பார்வையற்றோர், மாற்றத்திறனாளிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் வசித்து வருகின்றனர்.

வளைகுடா நாட்டில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கேஸ் தட்டுப்பாடு நிலவுவதால் லூப்ரா சேவை மையத்திற்கு கிடைக்க வேண்டிய சமையல் எரிவாயு சிலிண்டர்களும் கிடைக்கப்பெறாமல் அங்கு சமையல் செய்வது பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது, மேலும் சேவை மையங்களுக்கு சமூக நலத்துறை சார்பில் வழங்கவேண்டிய மன்னன்ணெய்யும் கிடைக்கப்பெறவில்லை

கேஸ் தட்டுப்பாடு காரணமாக சமையல் செய்யமுடியாததால் தங்களுக்கு கேஸ் அல்லது மண்ணெண்ணெய் வழங்கிடகோரி, கண் பபார்வையற்றோர் மற்றும் அவர்களது குழந்தைகள் சாப்பாட்டு தட்டுகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அதே நேரம் சமையல் எரிவாயு கிடைக்காததால் கடந்த இரண்டு மாதங்களாக கஞ்சி மற்றும் சரியான உணவு சமைக்க முடியாமல் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமத்தை சந்தித்து வருவதாகவும், கடந்த மாதம் 20 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறையிடம் மானிய விலையில் அரசால் வழங்கப்படும் சிலிண்டர் மற்றும்

மண்ணெண்ணெய் வழங்க கோரி மனு அளித்து ஒரு மாதங்கள் முடிந்தும் தற்போது வரை சிலிண்டர் மற்றும் மண்ணெண்ணெய் வழங்காமல் உள்ளதால் இன்று மீண்டும் ஆட்சி அலுவலகத்தில் தட்டேந்தி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், இனியாவது தங்களின் நிலை உணர்ந்து அரசு தங்களுக்கு சிலிண்டர் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments