திருச்சி மணிகண்டம் அருகே 29.7 கிலோ ஹான்ஸ் பறிமுதல் – ஒருவர் கைது திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருவாக்குடி பிரிவு ரோடு அருகே காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர், காவல்துறையினரை கண்டதும் வாகனத்தை திருப்பி தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.இதையடுத்து காவல்துறையினர் அவரை விரட்டி, மணிகண்டம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த 29 வயதான தங்கபாண்டியன் என்பது தெரியவந்தது.அவர் வைத்திருந்த சாக்குப் பையை சோதனை செய்தபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் 99 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒவ்வொரு பாக்கெட்டும் 300 கிராம் எடையுடன், மொத்தம் 29 கிலோ 700 கிராம் ஹான்ஸ் இருந்தது. இதன் மதிப்பு சுமார் 29 ஆயிரத்து 700 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஒரு செல்போன் மற்றும் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.இதையடுத்து தங்கபாண்டியனை கைது செய்த மணிகண்டம் போலீசார், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்து இரவு சிறையில் அடைத்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments