ரயில்கள் மூலமாக போதை பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், ஆபரேஷன் நர்கோஸ் என்ற திட்டத்தின் கீழ் இன்று (06.06.2026) காலை திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. திருச்சி இரயில்வே பாதுகாப்புப் படை, குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் திருச்சி போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு ஆகிய துறையினர் இணைந்து இந்த கூட்டாய்வை மேற்கொண்டனர்.

அப்போது ஹவுராவிலிருந்து திருச்சி வந்தடைந்த ஹவுரா – திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரயிலின் பின்பக்க பொதுப்பெட்டியின் கழிவறை அருகே, நீண்ட நேரமாக உரிமை கோரப்படாத நிலையில் ஒரு கருப்பு நிற கைப்பை கிடந்துள்ளது. அதனை பிரித்துப் பார்த்தபோது அதில் இரண்டு பொட்டலங்களில் 5 கிலோ எடை கொண்ட கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ₹.2,50,000 ஆகும்.

இதனைத் தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதனை திருச்சி போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் கஞ்சா கடத்தி வந்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments