தூய வளனார் கல்லூரி B.Com 2000-2003 ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பு சங்கமம் 28 நவம்பர் 2021 அன்று நடைபெற்றது.முன்னாள் மாணவர்கள் சங்கமத்தை கல்லூரியின் அதிபர் முனைவர் லியோனார்டு பெர்னாண்டோ தலைமையேற்று துவக்கி வைத்தார்.
வணிகவியல் துறை பேராசிரியர்கள் துறைத்தலைவர் முனைவர். அலெக்சாண்டர் பிரவீன் துரை, கல்லூரி துணை முதல்வர் முனைவர். அலெக்ஸ், மேலாண்மைப் பள்ளி டீன் முனைவர். ஜான், முனைவர். மைக்கேல் சம்மனசு, முனைவர். ஜூலியஸ் சீசர், கணிதத் துறை பேராசிரியர் முனைவர். இராச ரத்தினம், செப்பர்டு துறை இயக்குனர். தந்தை பெர்க்மான்ஸ், கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் திரு. புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலையில் விழா சிறப்பாக நடைபெற்றது.
உலக நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 60க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் 18 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடி கல்லூரியின் நினைவலைகளை பகிர்ந்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
கடந்த ஆண்டுகளின் கல்லூரி வளர்ச்சி பற்றியும், எதிர்கால செயல்பாடுகளுக்கு முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து தங்கள் பங்களிப்பை ஆற்ற வேண்டிய செயல் திட்டங்களை பற்றியும் கலந்துரையாடினர்.
கல்லூரியில் படித்து பட்டம் பெற்று பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வரும் முன்னாள் மாணவர்கள் தங்களின் வாழ்வில் வளர்ச்சியடைந்த பல்வேறு மாற்றங்களை, அனுபவங்களை வெளிப்படுத்தினர்.
மேலும், நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் மாணவர்களுக்கு கல்லூரி சார்பாக பாராட்டுக்களையும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்களும் ஒருங்கிணைந்து வணிகவியல் துறைக்கு நினைவு பரிசினை வழங்கி சிறப்பித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           126
126                           
 
 
 
 
 
 
 
 

 01 December, 2021
 01 December, 2021





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments