அதிமுக சார்பில் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோவில் அருகில் அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் கண்டன உரையாற்றிய போது திமுக ஆட்சி அமைத்து மக்களுக்கு எந்த ஒரு நல்ல காரியமும் முழுமையாக செய்யவில்லை.
குறிப்பாக பேனர் கலாச்சாரத்தை ஒழிப்போம் என சொல்லிக்கொள்ளும் திமுகவினர் திருச்சி மாநகரை பொருத்தவரை திமுக அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக் கொண்டு மாநகர் முழுவதும் பேனர் ஒட்டி வருகின்றனர். காவல்துறையினர் திமுகவின் பேனரை அகற்றவில்லை என்றால் திமுகவின் பேனர் மீது அதிமுக போஸ்டர் ஒட்ட படும் என எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும், கட்டுக்கடங்காத அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைத்திட வேண்டும், மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்யக்கோரியும், அம்மா கிளினிக் திட்டத்தை திமுக அரசு மூட நினைப்பதை கைவிடக் கோரியும், தேர்தல் வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டம் உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மழையினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து, நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
கோஷமிட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments