திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று இரவு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர். இன்று மீண்டும் காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்துள்ளது. கடைக்குள் சென்று பார்த்த போது கடையிலிருந்த மதுபானங்கள் பெட்டி கலைந்து கிடந்தது.
மேலும் மதுபான வகைககளை கணக்கு பார்த்த போது 6 மதுபான பாட்டில்கள் காணாமல் போய் இருந்துள்ளது. இது குறித்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மணிகண்டம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
டாஸ்மாக் கடையில் பணம் இல்லாத நிலையில் திருடர்கள் குறிப்பிட்ட மதுபான பாட்டில்களை மட்டும் எடுத்து சென்றுள்ளனர். டாஸ்மாக் கடைக்கு புகுந்தவர்கள் பணத்தை கொள்ளை அடிக்க வந்தார்களா இல்லை இரவு நேரத்தில் சரக்கு கிடைக்காமல் குறிப்பிட்ட மதுபான வகைய திருட வந்தார்களா என்பதை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn



            
            
            
            
            
            
            
            
            
            


Comments